



மதுரை மாவட்டம்
போதைப் பொருள்தடுப்பு விழிப்புணர்வு
கருத்தரங்கம்
மதுரை மாநகர காவல் துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன்,இ.கா.ப. அவர்கள் தலைமையில் சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் ஜூலை 4 ஆம் தேதி மாலை நடைபெற்றது.
மதுரை மாநகரில் உள்ள மருந்து நிறுவனம், மருந்து கடைகள் மற்றும் கூரியர் /பார்சல், சேவை நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் போதைப் பொருள்களின் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அவற்றின் விற்பனையை தடுக்கும் வகையிலும் அனைத்து மருந்து கடைகளிலும் மற்றும் பார்சல் சேவை நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் மாநகரில் போதைப் பொருட்களின் புழக்கத்தை குறைக்கும் வகையில் இதுவரை காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் போதை பொருட்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் எடுத்துரைத்தார்.
மதுரை மாநகர காவல் துறை ஆணையர்கள் உடன் இருந்தனர்.
