
கடமடையில்சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்றவர் கைது .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து போலீசார் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலக்கோடு அருகே கடமடை கிராமத்தில் உள்ள சிக்கன் கடையில் மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது.
அவரை பிடித்து விசாரித்ததில் வேடியப்பன் (வயது. 24) என்பதும் அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது,
அவரை கைது செய்த பாலக்கோடு போலீசார் அவரிடமிருந்து 20 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
