
மதுரை வில்லாபுரம் பகுதியில் ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீச்சு..
மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் அவனியாபுரம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கீரைத்துறை பகுதி யைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் ரத்தின குமார் (வயது 23) என்பவர் சாப்பிட வந்தார். சாப்பிட்ட பின்னர் அதற்கு பணம் தராமல் ஓட்டலில் வேலை பார்த்து வரும் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட் டுள்ளார்.
இதையடுத்து அந்த ஓட்டல் உரிமையாளர் ஜனார்த்தனன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரத்தினகுமாரை கைது செய்தனர்.
பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட ரத்தின குமார் ஜாமினில் வெளிய வந்தார். தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த, தன்மீது புகார் கொடுத்த வரை பழிவாங்க திட்டம் தீட்டினார். இதையடுத்து கடந்த 10-ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) இரவு ஓட்டல் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ஓட்டலில் இருந்த ஒரு சில பொருட்கள் சேதம் அடைந்தன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவனியாபுரம் இன்ஸ்பெக் டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சி பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தினார். அதில் பதிவான காட்சிகள் அடிப்படையில் ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரத்தினகுமாரை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவருடன் வந்த மற்றொரு நபருக்கு போலீ சார் வலைவீசி தேடி வரு கின்றனர். பெட்ரோல் குண்டு வீசிய ரத்தினகுமார் மீது கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது
