பாளையம் கிராமத்தில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் வெட்டு குத்து. பஞ்சப்பள்ளி போலீசார் விசாரணை .
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன்(வயது.35), அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குமார் (வயது.34) இருவரும் நண்பர்கள். நேற்று மதியம் மணிகண்டன் குவாட்டர் வாங்கி கொண்டு குமார் வீட்டிற்க்கு சென்று இருவரும் மது அருந்தி உள்ளனர்.
போதையில் குமார் மணிகண்டனின் மனைவிக்கு போன் செய்ய போவதாக கூறியுள்ளார், இதனை மணிகண்டன் கண்டித்துள்ளர்,
இதனால் ஆத்திரமடைந்த குமார் கொடுவாளால் மணிகண்டனின் தலை, கை, கால் என பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு தப்பி சென்றார்.
இரத்த காயத்துடன் அலறிய மணிகண்டனை அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.