Police Department News

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். 
சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த எ.எ.நக்கீரன், நிடுமொலு மாலா, எஸ்.செளந்தா், சுந்தா் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகிய 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டார். 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விழாவில் 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதேபோல கா்நாடக உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த அனந்த் ராமநாத் ஹெக்டே, ஹேமலேகா ஆகியோரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரைவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published.