கைது செய்வதற்கல்லாத புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்தால் நடைமுறை என்ன?
புகார் கைது செய்வதற்கல்லாதது எனில் காவல்நிலையத்தில் கு.வி.மு.வி. 155 -இன்படி புகாரை பெற்றுக்கொண்டு புகார் கொடுத்தவரை நீதி மன்றத்திற்கு செல்லுங்கள் என காவல்துறை அறிவுரை கூற வேண்டும் என அந்த விதியிலேயே சொல்கிறது. ஆனால் இது நடைமுறையில் போலீசாராலே விசாரிக்கப்பட்டு இனி மேல் இது போல் நடந்து கொள்ள மாட்டோம் என எழுதி வாங்கி கொண்டு வழக்கை முடித்து விடுவர்.
இதுவரை எனக்கு தெரிந்து இது போல் வழக்கு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டு யாருக்கும் தண்டனை வழங்கியதாக தெரியவில்லை
இது போன்ற புகாரை காவல்நிலையம் வாங்க மறுத்தால் அடுத்து என்ன செய்வதென்று சட்ட விதிகள் எதுவும் இல்லை.
இது போன்ற சமயங்களில் இவைகளை குறிப்பிட்டு கு.வி..வி. 2(4)-இன் கீழ் முறையீட்டை வட்டார வரம்புள்ள குற்றவியல் நடுவரிடம் கொடுக்கலாம்.