Police Department News

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 44 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 44 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கும், ஒலக்கூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மயிலத்திற்கும், அவலூர்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கோட்டக்குப்பத்திற்கும், கோட்டக்குப்பம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வன் ஒலக்கூருக்கும், கிளியனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தாஸ் திருவெண்ணெய்நல்லூருக்கும், மணிவண்ணன் கண்டமங்கலத்திற்கும், ஆரோவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் அரகண்டநல்லூருக்கும், இவர்கள் உள்பட மொத்தம் 44 போலீசார் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.