


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய புறக்காவல் நிலையம் மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் கண்டணங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்கும் விதமாகவும் புதிய புறக்காவல் நிலையம் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாநகர காவல் ஆணையர் அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு),கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இப்புறக்காவல் நிலையத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை கண்காணிக்கும் விதமாக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தல்லாகுளம் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
