

சாலை விபத்தில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு 2017 பேட்ச் காவலர்கள் சார்பில் நல உதவி
சேலம் மாவட்டம், வீராணத்தை சேர்ந்தவரும் , கோவை மாநகர ஆயுதப்படை காவலராக பணியாற்றிய காவலர் 2325 தெய்வத்திரு கா. ராஜா(வயது-27) த/பெ காசியப்பன் அவர்கள் 13.07.2023 அன்று எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் மரணம் அடைந்தார்.
இவருக்கு அவருடன் பணியில் சேர்ந்து தமிழக காவல்துறையில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர்கள் 2017- பேட்ச் காக்கும் உறவுகள் குழு என்ற வாட்ஸ்அப் குழு மூலம் 38 மாவட்டங்களை சேர்ந்த 2017-பேட்ச் 6057 காவல் நண்பர்களிடம் இருந்து உதவி தொகையாக பெறப்பட்ட தொகையினை மறைந்த காவலரின் தந்தை மற்றும் தாய் INDIA POST BANK வீராணம் சின்னனூர் கிளை வங்கியில் ரூ.14,00,000 /- நிரந்தர வைப்பு தொகையாகவும், ரொக்கமாக ரூ.4,70200 /- என மொத்தம் ரூ.1870200/- யும் மற்றும் தென்னை மரக்கன்றும் 05.10.2023 இன்று மதியம் 01.00 மணி அளவில் சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு அருண் கபிலன் அவர்களின் பொற்கரங்களால் 2017 batch காவல் நண்பர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது..
சேலம் மாவட்ட 2017-பேட்ச் காக்கும் உறவுகள் குழு நிர்வாகிகள் உடனிருந்தனர்
