Police Department News

100 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல

100 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல

தேவகோட்டை
நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தேவ கோட்டை நகரில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல் முருகன் தலைமையில் உத வியாளர் மாணிக்கம் மற்றும் நகராட்சி பணியாளர் கள் நகரில் உணவகங்கள் மற்றும் சாலையோர கடைக ளில் திடீர் சோதனை நடத்தி னார்கள்.
இதில் கெட்டுப்போன 100 கிலோ கோழி இறைச்சி, பலமுறை பயன்படுத்தப் பட்ட 30 லிட்டர் சமையல் எண்ணெய் அதிகளவு ரசாயன பொடி கலந்த உணவு கள் பறிமுதல் செய்தனர் மேலும் இரண்டு கடைக ளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.10,000 அபராதம் விதித்தனர். சிறிய பெட்டிக்கடை முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர், உணவகங்கள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட சுமார் 50 கிலோவுக்கு மேற் பட்ட பாலித்தீன் பைகளை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதுபோன்ற அதிரடி சோதனை தொட ரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.