
யார் மேலான அதிகாரம் பெற்றவர்
நாட்டில் அதிகாரப்போட்டி நடந்து வரும் இந்த வேளையில் யார் மேலானஅதிகாரம் படைத்தவர் என கேட்டால் நம்மில் பலர் யாரை கூறுவர்.
குடியரசு தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரதமர் மத்திய அமைச்சர்கள் ஆளுனர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் இந்திய காவல் பணி அதிகாரிகள் என முடிந்த அளவிற்கு ஒரு பட்டியலே இடுவார்கள். இவர்கள் எல்லாம் அதிக அதிகாரம் படைத்தவர்களா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
உண்மையில் இவர்கலெல்லாம் அவர்களின் பதவிக்கு தக்கவாறு அதிகாரம் கொடுக்கப் பட்டவர்களே இவர்களுக்கெல்லாம் யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது. சட்டம் ஆம் சட்டம்தான்
இவர்கள் எல்லாம் யாருக்கு கட்டுப்படுகிறார்களோ இல்லையோ இவர்கள் அனைவரும் ஒரு விசயத்திற்கு கட்டுப்பட்டவர்களென்றால் அது சட்டத்திற்கு மட்டும்தான். எனவே சட்டம்தான் மேலான அதிகாரம் படைத்தது சட்டமே முதன்மையானது.
இப்படிப்பட்ட மேலான அதிகாரம் படைத்த சட்டத்தை மக்கள் அனைரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மக்கள் அதை ஏற்று கொள்ளாமல் சட்டம் படித்து நாங்கள் என்ன கோர்ட்க்கா போய் வாதட போகிறோம் என அறியாமையில் உள்ளனர்
இந்திய அரசு இப்படிபட்ட சட்ட கல்வியை அடிப்படை கல்வியிலேயே கொண்டு வர வேண்டுமென்பது சமூக ஆர்வலர்களது கோரிக்கையாக உள்ளது.
