மதுரை தெப்பகுளம் பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு மையம் திறப்பு
மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் எதிரே போக்குவரத்து விழிப்புணர்வு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக போலீஸ் கமிஷனர் திரு. லோகநாதன் IPS அவர்கள் திறந்து வைத்தார்
இந்த மையத்தில் வாகன ஓட்டிகளுக்கு தேவையான போக்குவரத்து விழிப்புணர்வு வழிமுறைகள் போலீசார் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் வாகனங்களின் தகுதிச் சான்று இன்சூரன்ஸ் முடியும் நாட்களை அறிதல் வாகனம் மீதான அபராதம் அறிதல் மற்றும் அவைகளை செலுத்தும் முறைகள் காவல் உதவி செயலி பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன
இந்நிகழ்சியில் போக்குவரத்து துணைகமிஷனர் குமார் கூடுதல் துணைகமிஷனர் திருமலைகுமார் உதவி கமிஷனர்ள் செல்வின் மாரியப்பன் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ.தங்கமணி ஆகியோர்கள் பங்கேற்றனர்.