Police Department News

தருமபுரியில் நில அளவைத்துறையின் கழிவு வாகனம் நாளை ஏலம்

தருமபுரியில் நில அளவைத்துறையின் கழிவு வாகனம் நாளை ஏலம்

தருமபுரியில் நில அளவைத்தறையின் கழிவு வாகனம் நாளை ஏலம் விடப்படுகிறது.

அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும்

தருமபுரி நில உதவி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்த வாகனம் எண். மகேந்திரா ஜீப் கழிவு செய்யப்பட்ட தையடுத்து அந்த வாகனம் நாளை 3-ந்தேதி காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.
மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியைக் கோரலாம். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் அரசு நிர்ணயித்துள்ள ஏலத் தொகையில் 10 சதவீதம் முன் பிணைத்தொகையாகவோ அல்லது வரைவோலையாக செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஏலத்தில் அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும். அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதியில் நடத்தப்படும்.
ஏலம் எடுத்தவர் உடன் பணத்தை செலுத்தி பின் பொருளினை எடுத்து செல்ல வேண்டும். ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன்பிணைத் தொகை மீள வழங்கப்படும்.
இந்த ஏலத்தை ரத்து செய்வதற்கோ, ஏலத்தை நிறுத்தி வைக்க, ஏலத்தை முடித்து வைப்பதற்கு துறை தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.