

கோட்டகுப்பம் காவல் நிலையம் சார்பில் மாணவர்களுக்கு சைபர் கிரைம், சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின்பேரில் கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பில் பொம்மையார்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு சைபர் கிரைம் மற்றும் சாலை பாதுகாப்பு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதை பொருட்கள் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அனுராதா மற்றும் துணை முதல்வர் மலர் மற்றும் ஆசிரியர்கள் ஸ்கவுட் மாஸ்டர் சாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
