Police Department News

வெளிநாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூபாய் 54, 99,300/-ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர் கைது.

வெளிநாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூபாய் 54, 99,300/-ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர் கைது.


ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சூடானில் வசிக்கும் திரு .சாகுல் அமீது என்பவர் Starwings General Trading LLC என்ற பெயரில் அலுவலகம் வைத்து இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து அரிசி மற்றும் பருப்பு வகைகளை கொள்முதல் செய்து சூடான் மற்றும் துபாயில் வியாபாரம் செய்து வருவதாகவும், அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆயிஷா எக்ஸ்போர்ட் என்ற பெயரில் கம்பெனி வைத்து நடத்திவரும் எதிரி முகமது ஜாஹிர் உசேன் என்பவரிடம் 502 மெட்ரிக் டன் ஸ்வர்ணா வைட் ரைஸ் மற்றும் ஐ ஆர் 64 என்ற புழுங்கல் அரிசி இவைகளை ரூ.2,00,00,000/-க்கு கொள்முதல் செய்ய e.mail மூலமாக Sale Purchase Agreement செய்து கொண்டு மேற்படி Agreement படி முன் பணமாக மூன்று தவணையாக ரூ.54,99,300/-வங்கி பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பியதாகவும்,முன்பணமாக மேற்படி தொகையை பெற்றுக் கொண்ட எதிரி அரிசியை ஏற்றுமதி செய்யாமல் பல காரணங்களை கூறி காலம் கடத்தி வந்ததாகவும், வாதி அரிசியை ஏற்றுமதி செய்ய சொல்லி பேசிய போது மேற்படி எதிரி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், எனவே வங்கி பணிவார்த்தை மூலமாக ரூ.54,99,000/- ஐ பெற்றுக் கொண்டு ஏமாற்றிய எதிரி முகமது ஜாகிர் உசேன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகார் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து புலான் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இவ்வழக்கில் தொடர்புடைய தலை மறைவு எதிரியை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு .சந்தி ராய் ரத்தோர் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரிலும், திரு.C. மகேஸ்வரி IPS, கூடுதல் ஆணையாளர், மத்திய மத்திய குற்றப்பிரிவு அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் திருமதி.நிஷா IPS அவர்களின் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு EDF-1 காவல் உதவி ஆணையாளர் திரு.ஜான் விக்டர் அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் மோசடி வழக்கில் சென்னை துரைப்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த முகமது ஜாகிர் உசேன் ஆ/வ 33 த/பெ பஹதூர்,நெ 471 செக்ரட்டரியட் காலனி, 4வது வட்டச்சாலை , துரைப்பாக்கம், சென்னை 97. என்பவரை 07.10.2023 ம் கைது செய்து கனம் நடுவர் CCB & CBCID நீதிமன்றம் எழும்பூர் அவர்களிடம் ஆசை படுத்தி நீதிமன்றம் ,உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கார் -1, Laptop -1, கைப்பேசி -11, சீல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. விசாரணையில் எதிரி இதுபோன்று பலரை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவருகிறது. எனவே இவ் வழக்கில் வேறு யாராவது சம்பந்தப் பட்டு உள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விசாரனை அதிகாரி திருமதி.A.மேனகா ஆய்வாளர்,EDF-1,Team -2,

Leave a Reply

Your email address will not be published.