
பாலக்கோடு அடுத்துள்ள தொட்டம்பட்டி கிராமத்தில் புளியமரத்தடியில் சூதாடிய 4 பேர் கைது. 1,230 ரூபாய் பணம் பறிமுதல் .
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது,
தகவலின் பேரில் எஸ்.ஐ.கோகுல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தொட்டம்பட்டி கிராமத்தில் உள்ள புளிய மரத்தடியில் சூதாடி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் ,
அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான மணி ( வயது. 23), சந்தோஷ்(வயது. 22), விக்னேஷ்(வயது23), சக்தி (வயது 32)
என்பது தெரிய வந்தது,
4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டுக்கள் மற்றும் 1,230 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.
