Police Department News

ஆயுள் தண்டனை பெற்ற போக்சோ கைதி திடீர் சாவு.

ஆயுள் தண்டனை பெற்ற போக்சோ கைதி திடீர் சாவு.

மதுரை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி யை சேர்ந்தவர் மருதுவீரன் என்ற மதுரை வீரன் (வயது 50). இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் மருதுவீரன் அடைக்கப்பட்டி ருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவ ருக்கு சிறை மருத்துவ மனையில் உடனே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருது வீரனை சிறைத்துறை போலீசார் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மருதுவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிறை அதிகாரி முனிஸ்திவாகர் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.