சுவர் இடிந்து உயிரிழந்த காவலர் சரவணன் அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் தூப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. DGP சைலேந்திரபாபு அவர்கள் இன்று மதுரை மாநகரில் துக்கநிகழ்வில் கலந்துகொண்டார்.
இரக்கமில்லா காலனே காவலர்களின் உயிர் பலிகள் வாங்கும் உன் பசி இன்னுமா தீரவில்லை ?
இரக்கமற்ற காலனே மக்களைக் காத்திடும் காவல் தெய்வங்களை நீ பலி வாங்கினால் மக்களை காப்பது யார் ?
காப்பவன் கடவுள் என்றால் காவலர்களும் கடவுள் பிரதிநிதிதானே ?
இரக்கம் கொண்டு உன் கொலை வெறிதனை நிறுத்திடு உமை மன்றாடி பணிந்து வணங்கி வேண்டுகிறோம் .
தலைமை காவலர் சேவைதிரு .சரவணன் அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய ,
அன்னாரது பிரிவின் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர் உறவினர் நண்பர்களுக்கு இத்துயரத்தை தாங்கிடும் மனபலத்தை கிடைத்திடவும் இறைவனை வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி