
காரிமங்கலம் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பாலகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பேற்பு .
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் வெங்கட்ராமன்,
இவர் கடந்த வாரம் மேச்சேரி காவல் நிலையாக ஆய்வாளராகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் காரிமங்கலம் காவல் ஆய்வாளராகவும் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்து சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து காரிமங்கலம் காவல் ஆய்வாளராக பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
அது சமயம் காரிமங்கலம் காவல் நிலைய போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பணி சிறக்க அவருக்கு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
