ஆயுதங்களை காட்டி மிரட்டிய இரண்டு பேர் கைது
மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் நொண்டிசாமி மற்றும் அறிவழகன் ஆகியோர் கிறுதுமால் நதிக்கரை சாலையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். பழைய அரசு மதுபான கடை அருகே ஆயுதங்களுடன் நின்று இருந்த இருவரை விரட்டி பிடித்தனர். விசாரணையில் மாடக்குளம் பகுதி விக்னேஷ் வயது (20) பழைய குயவர்பாளையம் வசந்த் வயது(20) என தெரிய வந்தது. அவர்கள் ஆயுதங்களை வைத்துக்கொண்டு அவ்வழியாக செல்பவர்களை மிரட்டி அச்சுறுத்தியது தெரிய வந்தது. இதை அடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்