இரு சக்கர வாகனத்தில் காரணமின்றி ஊர் சுற்றியவர் மீது செல்லூர் போலீசார் வழக்கு
மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி லெக்ஷிமி அவர்கள் செல்லூர்,L.I.C. அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் அவ்வழியாக செல்லூர் அஹிம்சாபுரம் 8 வது தெருவை சேர்ந்த பால்சாமி மகன் முருகன் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை மீறி அத்தியாவசிய காரணமின்றியும் தொற்று நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் தன் இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றியவரை பிடித்து அவர் மீது சார்பு ஆய்வாளர் திருமதி லெக்ஷிமி அவர்கள் வழக்குப் பதிவு செய்தார்கள்.