
தண்டனையிலிருந்து போலீசாரை விடுவிக்க ஐ.ஜி.,களுக்கு அதிகாரம்
ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளான போலீசாரின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரித்து தீர்வு காணும் அதிகாரம் மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் சிறப்பு பிரிவு ஐ.ஜி.,களுக்கு வழங்கப்பட்டுள்ளது
சீருடை பணியாளர்க ளான போலீசார் ஒழுங்கீனமாக செயல்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் இதனால் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கும் சம்பளப்பிடித்தம் செய்யப்படும் சம்பள உயர்வும் கிடைக்காது
சிறிய தண்டனை பெற்றவர் பட்டியலில் வைக்கப்படுவர்கள் அவர்கள் டி.ஜி.பி.,யை நேரடியாக சந்தித்து மனு அளித்து முறையிடுவார்கள் இந்த மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.,க்கு அதிகாரம் வழங்ப்பட்டிருந்தது.
மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் எஸ்.ஐ.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் வரையிலானவரின் மேல் முறையீட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யிடம் உள்ளது இனி இந்த அதிகாரம் மண்டல ஐ.ஜி.,களுக்கும் வழங்கப்பட்டுள்ளது
சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் எஸ்.ஐ.,கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் அதிகாரம் அந்தந்த பிரிவுகளின் ஐ.ஜி.,களுக்கு வழங்ப்பட்டுள்ளது.
சென்னை ஆவடி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பணிபுரியும் எஸ்.ஐ.,கள் மற்றும் இன்ஸ்பெக்டர் வரையிலானவர்களின் மேல்முறையீட்டு மனுகள் மீது தீர்வு காணும் அதிகாரம் மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யிடம் உள்ளது.
இனி இந்த அதிகாரம் கமிஷனர் அலுவலகங்களில் பணிபுரியும் கூடுதல் கமிஷனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
