சிறுவன் உள்பட 7 பேர் கைது
மதுரை அருகே சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் அழகுபாண்டி என்பவரின் மகன் சங்குகண்ணன் (வயது23). இவர் ஆட்டோ டிரைவர் ஆவர். பெற்றோருடன் சிலைமான் சங்கையா கோவில் தெருவில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பாதியிலேயே எழுந்து சென்றார். அவர் அங்கிருந்து பொதுப் பணித்துறை கால்வாய் அருகே சென்ற போது அடையாளம் தெரி யாத கும்பல் ஒன்று சங்கு கண்ணனை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சங்குக்கண்ணனை அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்காக 108 ஆம்புலன்சை வரவ ழைத்தனர்.
ஆம்புலன்சில் இருந்த மருத்துவர்கள் பரிேசாதித்த போது சங்கு கண்ணன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சங்கு கண்ணனின் தந்தை அழகுபாண்டி சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சங்குகண்ணனை கொலை செய்த கொலையாளிகளின் உருவங்கள் அதில் பதிவாகி இருந்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கீழடி சோனையார்கோவில்தெரு அய்யாச்சாமி மகன் முத்துபாலகிருஷ்ணன் (19), அண்ணாநகர் எஸ்.எம்.பி.காலனி பிச்சைமணி மகன் அருண்குமார் (21), சோனையார் கோவில்தெரு முத்துசாமிமகன் சுபாஸ்சந்திரபோஸ் (23), கண்ணன் மகன் சுதாகர் (21), மேலத்தெரு சிதம்பரம் மகன் வீரமணி (20), சின்ன உடைப்பு ராமன்குளம் பாண்டி மகன் சுதன்ராஜ் (24) மற்றும் 15 வயது சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்தனர்