காவல் கண்காணிப்பாளர் சிந்து உறுதிமொழி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற உறுதிமொழியில் மகளிர் தின கொண்டாட்டத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெண் முன்னேறினால் சமுதாயம் முன்னேறுவதற்கு உந்துசக்தியாக, அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கமுடியும் பெண்களுக்கு பல இன்னல்கள் வந்தாலும் படிப்பிலும், பண்பிலும் சிறந்து விளங்கினால் அனைத்து இன்ளல்களும் தானாகவே விட்டு விலகி ஓடிவிடும், இன்றைய கால கட்டத்தில் இருக்கும் நவீன தொழில்நுட் பங்களை பயன்படுத்தி பாலியல் குற்றங் களை தடுக்கவேண்டும். பெண்கள் தங்களது உடலை உடற்பயிற்சிசெய்து உறுதிப்படுத்திக் கொண்டால் மன அழுத்தங்கள் நீங்கிவிடும். நோய் பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும், உற்சாகமாக செயல்படுவதன் மூலம் வீட் டையும், நாட்டையும் வளர்ச்சி அடைய செய்யலாம்.