Police Recruitment

பயங்கரமான ஆயுதம் அல்லது வேறு வழிகளால் தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல்

பயங்கரமான ஆயுதம் அல்லது வேறு வழிகளால் தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல்

  இந்திய தண்டனை சட்டம் பிரிவு 324 (IPC Section 324)

துப்பாக்கி, குத்துவாள், கத்தி, அரிவாள் போன்றவை மரணத்தை விளைவிக்கப் பயன்படுத்தக்கூடியவை. அதே போல் நெருப்பும், நெருப்பில் காய்ச்சப்பட்ட கருவிகளும் அத்தகைய அபாயத்தை விளைவிக்கக்கூடியவை விஷம், வெடி மருந்து, துருப்பிடிக்கச் செய்யும் பொருட்கள், இன்னும் மனிதர்களுடைய சுவாசத்தில், உள்ளுறுப்புகளில் அல்லது ரத்தத்தில் கலப்பதன் மூலம் அத்தகைய அபாயத்தை உண்டாக்கக்கூடும் மிருகத்தாலும் அது சாத்தியமே, எனவே இவற்றில் ஏதாவது ஒற்றைப்பயன்படுத்தி தன்னிச்சையாகக் காயம் உண்டாக்குவது குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் (334 – ஆவது பிரிவில் விளக்கப்பட்டுள்ளபடி இத்தகைய செயல் புரியப்பட்டால் இந்தத் தண்டனை பொருந்தாது).

Leave a Reply

Your email address will not be published.