
பாலக்கோடு அருகே கோயிலூரான் கொட்டாய் கிராமத்தில் 4 தலைமுறையாக பயன்படுத்திய தெரு அடைப்பு _ 2 குடும்பங்கள் தவிப்பு.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கோயிலூரான் கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளிகளான சங்கர்(வயது.40) ஆனந்தன் (42) ஆகிய இருவரது குடும்பங்களும் சுமார் 100 ஆண்டுகள் 4 தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த தெருவை
இவர்களது உறவினரான பக்கத்து வீட்டை சேர்ந்த மாதம்மாள், கலா, சாலா ஆகிய குடும்பத்தினர் எங்களுக்கு தான் இந்த இடம் சொந்தம் என கூறி இன்று காலை தெருவை முள்வேலியால் திடிரென அடைத்துவிட்டனர்.
இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கும், குடிக்க தண்ணீர் கொண்டு செல்ல முடியாமலும், பால், உணவு பொருட்கள் வாங்கி செல்ல முடியாமலும்,
கழிவறைக்கு கூட சென்று வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இரண்டு குடும்பத்தினரும் பாலக்கோடு காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும்,
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோவிலூரான் கொட்டாயை சேர்ந்த ராஜேஸ்வரி கூறியதாவது.
