Police Recruitment

காவலர் வீரவணக்க நாள் நினைவு தினத்தை முன்னிட்டு காவலர்-பொதுமக்கள் ஒத்துழைப்பு கட்டுரை போட்டி நடைபெற்றது

காவலர் வீரவணக்க நாள் நினைவு தினத்தை முன்னிட்டு காவலர்-பொதுமக்கள் ஒத்துழைப்பு கட்டுரை போட்டி நடைபெற்றது

காவலர் வீர வணக்க நாள் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை மட்டும் ஓவிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்களுக்கு காவல் ஆணையர் வாழ்த்து.
.
காவலர் வீர வணக்க நாள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர காவல் துறை சார்பாக சாலை விபத்து மற்றும் இறப்புகளைக் குறைத்தல்(Reducing of Road Accidents and Deaths) என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை போட்டியும் காவலர்-பொதுமக்கள் ஒத்துழைப்பு(Police- Public Co-operation) என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியில் 32 பள்ளிகளை சேர்ந்த 328 பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற 30 மாணவ-மாணவியர்களுக்கு இன்று (21.10.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள், போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் மற்றும் போக்குவரத்து உதவி ஆணையர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.