Police Recruitment

மதுரையில் வியாபாரியிடம் ரூ.1½ கோடி மோசடி

மதுரையில் வியாபாரியிடம் ரூ.1½ கோடி மோசடி

மதுரை கே.கே.நகர் 80 அடி ரோட்டை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் முகமது சல்மான்(வயது21). இவர் இறக்குமதி பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைபாஸ் ரோட்டில் உள்ள பொன்மேனியை சேர்ந்த சையத்ரசின் என்பவர் முகமது சல்மானை சந்தித்தார்.
அப்போது துருக்கி நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய முகமது சல்மான் பல்வேறு தவணைகளில் சையத்ரசின் வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 43 லட்சம் செலுத்தியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட பின் வெங்காயத்தை இறக்குமதி செய்து தரவில்லை. பலமுறை கேட்டும் உரிய பதில் இல்லை. இதையடுத்து முகமது சல்மான் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணம் தராமல் சையத்ரசின், அவரது மனைவி ரோசல் ஆகியோர் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. மேலும் பணத்தை திருப்பிக்கேட்டபோது முகமது சல்மானை மிரட்டி யதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பணம் மோசடி தொடர்பாக மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மோசடி செய்த சையத்ரசின்-ரோசலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.