
பரிசு கூப்பன் மோசடி,சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
பிரபல வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் பரிசு கூப்பன் அறிவித்து இருப்பதாக பரவி வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என மாநில சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்
அவர்கள் கூறியதாவது தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் பிரபல வணிக நிறுவனங்கள் உணவகங்கள் பரிசு கூப்பன்களை அறிவித்துள்ளன இந்த லிங்கை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பினால் மொபைல் போன் உள்ளிட்ட பரிசு பொருட்களை பெறலாம் என்று வதந்தி பரப்பி வருகின்றனர்.
அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் ஹேக்கர்கள் தகவல் திருட்டில் ஈடுபடக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பரிசு கூப்பன் மோசடி குறித்து விசாரித்து வருகிறோம்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
