பணியில் இருந்த போலீசார் மீது ஆட்டோ மோதி விபத்து டிஜிபி மற்றும் காவல் ஆணையர் நேரில் சென்று விசாரணை
விபத்து. சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி, மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள்
மதுரை அவனியாபுரம்,சின்ன உடைப்பு அருகே உள்ள தற்காலிக செக்போஸ்ட்டில் போலீசார் நேற்று காலை
மருதுபாண்டியர் குருபூஜை தினத்தை ஒட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று, திடீரென செக்போஸ்ட்டில் இருந்த போலீசார் மீது மோதியது. இந்த விபத்தில் செக் போஸ்ட் கண்காணிப்பு பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வேலாயுதம், கிங்சன் ஜேக்கப், காவலர் கண்ணன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை உடன் பணிபுரிந்த சக காவலர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் உடனே அனுமதித்தனர்.
சிகிச்சை பெறும் போலீசாரை, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி.திரு.அருண் IPS., மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.லோகநாதன் IPS.,ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என போலீசாருக்கு நம்பிக்கை தெரிவித்தனர். இது போலீஸாருக்கு நம்பிக்கையும் நெகழ்ச்சியையும் ஏற்படுத்தியது.