
பரிசு கூப்பன் மோசடி சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை குறி வைத்து பிரபல வணிக நிறுவனங்கள், உணவகங்கள் பெயரில் சைபர்கிரைம் குற்றவாளிகள் பரிசு கூப்பன்களை அறிவித்து WhatsApp குழுக்களுக்கு அனுப்பி தொலைபேசி உள்ளிட்ட பரிசு பொருட்களை பெறலாம் என்று வதந்தி பரப்பி வருகின்றனர்.
இந்த இணைப்புகளை பயன்படுத்தி சைபர்கிரைம் குற்றவாளிகள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருட நேரிடலாம். எனவே இதுபோன்ற இணைப்புகளை தொட வேண்டாம் என்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
