
தென்காசி கொலை வழக்கில் இரண்டாவது எதிரி கைது
தென்காசி காவல் நிலையம்
கடந்த 23.10.2023 ஆம் தேதி தென்காசி யானை பாலம் அருகே உள்ள கல் மண்டபத்தில் தங்கி இருந்த மேல புலி ஊரை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரை நாகக் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்தது சம்பந்தமாக ஏற்கனவே கஞ்சா அலி என்ற புறா அலி என்பவன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக இருந்து வந்த இரண்டாது எதிரி தென்காசி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த கடற்கரை என்பவர் மகன் சுடலை குமார் வயது 37/23 என்பவரை தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் திரு பாலமுருகன் தலைமையில் தனிப்படையை சேர்ந்த சார்பு ஆய்வாளர் திரு விஜயகுமார் காவலர்கள் ஆஷிக் அலி, சதாம் , அன்பு அனிபா மற்றும் சிவகுமார் ஆகியோர்கள் சகிதம் இன்று வாய்கால் பாலம் அருகே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டது .
