Police Recruitment

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் (68). இவரது மகன் ஜெகதீஷ்குமார் (38). இவர் மென்பொருள் பொறியாளராக சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு, மகனை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தார். பல நாட்களாக இவரது வீடு பூட்டிக்கிடப்பதைப் பார்த்த மர்ம ஆசாமிகள், வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். ராமதாஸ் வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதைப் பார்த்து அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், இது குறித்து சென்னையில் இருக்கும் ராமதாஸிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் கூறிய தகவலின் படி வீட்டில் இருந்த 2 பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 102 பவுன் தங்க நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் திருடு போனது தெரிய வந்தது. உடனடியாக தடயவியல் நிபுணர்களை போலீசார் வரவழைத்து தடயங்களை சேகரித்தனர், மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.