விருதுநகர் மாவட்டம்:-
திருவில்லிபுத்தூரில் சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…
பெருகிவரும் வாகனத்தின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதனால் எதிர்பாராத விபத்தும் நடக்கின்றது.
அதனை சீர்செய்யும் நோக்கில் தமிழ அரசின் சார்பில் திருவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து காவல்துறையினர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
இருசக்கர வாகன விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தலைகவசத்தின் அவசியத்தையும்
எடுத்துரைக்கும்விதம் இந்த பேரணி சின்ன கடை பஜார், பெரிய கடை பஜார், மற்றும் நான்கு ரதவீதி அனைவரையும் திரும்பிபார்க்க வைத்தது.
மக்களின் நலனுக்காகவும் சமுதாய நலனை கருத்தில் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பெரும்பாலான மக்கள் கண்டுகளித்தனர்.
அத்துடன் முககவசம் அணிவது குறித்த விழிப்புணர்வும் நடைபெற்றது
இந்த நிகழ்வு திருவில்லிபுத்தூர்
டி எஸ் பி நமசிவாயம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மற்றும் நகர் ஆய்வாளர் பாஸ்கரன் அவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கியும் சாலை பாதுகாப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்
