தருமபுரி மான்காரன் கொட்டாய் பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதியதில் கட்டிட மேஸ்திரி படுகாயம்.
தருமபுரி மாவட்டம் பெரியமல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சரவணன் (வயது .40)
இவர் தருமபுரி செல்வதற்காக நேற்று காலை 10 மணி அளவில் தருமபுரி – மொரப்பூர் சாலையில் சோலைக்கொட்டாய் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்,
மான்காரன் கொட்டாய் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது பிரிவு சாலையில் இருந்து குறுக்கே வந்த மொபட் மோட்டார் சைக்கிள் மீது மோதியது, இதில் சரவணன் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசில் சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.