Police Recruitment

பலசரக்கு கடை வியாபாரி வீட்டில் புகுந்து 32 பவுன் நகை-பணம் கொள்ளை

பலசரக்கு கடை வியாபாரி வீட்டில் புகுந்து 32 பவுன் நகை-பணம் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் பசும்பொன் தெருவில் உள்ள பாரதி தாசன் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது50). இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கணேஷ்பாபு கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று ஜெயலட்சுமி கடைக்கு சென்றுவிட மகனும் வெளியே சென்று விட்டார். வீட்டில் வயதான மூதாட்டி ஒருவர் தனி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டி ருந்தார். வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்படாமல் சாத்தப் பட்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட மர்ம நபர் வீட்டுக்குள் நைசாக புகுந்து பீரோ சாவியை எடுத்து அதனை திறந்துள்ளார். பின்னர் அதில் இருந்த 32 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.
மாலையில் வீடு திரும்பிய ஜெயலட்சுமி பீரோ கதவு திறக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை யடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.