

தந்தையை தாக்கி மகளை கடத்திய வாலிபர், விரைந்து நடவடிக்கையெடுத்த ஆய்வாளருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்துக்கள் வலசை பகுதியில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த தாசையா என்பவரின் மகளை அதே பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் வயது 25 த/பெ முருகையா என்பவர் தனது கூட்டாளிகளுடன் தாசையாவை தாக்கி அவரது பெண்ணை காரில் கடத்தி சென்றனர் ,
தகவல் அறிந்த தென்காசி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டார்
தென்காசி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் தலைமையில் விரைந்து செயல்பட்டு எதிரி முத்துக்குமார் 23 த/பெ. பூவையா என்பவரை கைது செய்தனர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை கைப்பற்றினர். எதிரி முத்துக்குமாரை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் மேலும் தப்பி ஓடிய எதிரிகள் மனோஜ் குமார் வயது 25 தா/பெ முருகையா ஆண்டார்குளம் என்பவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் விரைந்து எதிரிகளை கைது செய்து துரித நடவடிக் எடுத்த காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
