காவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அவர்கள் தலைமையில்,
வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர்
பொதுமக்களிடமிருந்து 12 மனுக்களும் காவலர்களிடமிருந்து 11 மனுக்களும் பெறப்பட்டன.