

வெள்ளிசந்தை அருகேயுள்ள மாங்காய் மண்டிக்கு தீ வைத்து கார் உட்பட 17 இலட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்த வழக்கில் 2 பேர் கைது.
மேலும் இதற்கு தொடர்புடையவர்கள் குறித்து விசாரனை .
தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த பிக்கனஅள்ளியை சேர்ந்த முனிராஜ் (வயது.47)
இவர் வெள்ளிசந்தை 4 ரோடு அருகே மாங்காய் மண்டி வைத்து நடத்தி வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி இரவு 9 மணிக்கு மாங்காய் மண்டியில் தனது ஸ்கார்பியோ சொகுசு காரை நிறுத்திவிட்டு மண்டியை பூட்டி விட்டு வீட்டிற்க்கு சென்றார்.
சிறிது நேரத்தில் மாங்காய் மண்டியிலிருந்து புகை வருவதாக அக்கம் பக்கத்தினர் முனிராஜிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர்.
இருப்பினும் மாங்காய் மண்டியின் உள்ளே இருந்த ஸ்கார்பியோ கார், ஏர்கூலர், பீரோ, பணம் எண்ணும் எந்திரம், கிரேடு பெட்டிகள், எடை மெஷின் உள்ளிட்ட 17 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
இது குறித்து முனிராஜ் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் பிக்கனஅள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் தர்மதுரை (வயது. 26) அதே பகுதியை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் மோகன் (வயது. 26) என்பவர்கள் மாங்காய் மண்டிக்கு தீ வைத்தது தெரிய வந்தது.
இருவரையும் இன்று மகேந்திரமங்கலம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
மேலும் முனிராஜிக்கும் வேறு சிலருக்கும் முன்விரோதம் இருந்து வருவதாகவும் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் மாங்காய் மண்டிக்கு தீ வைத்து இருப்பதாகவும் சந்தேகப்படும் போலீசார்
இதற்கு காரணமானவர்கள் குறித்தும் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
