Police Department News

கோவை மாநகரில் விபத்துகள் குறைந்துள்ளன- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை மாநகரில் விபத்துகள் குறைந்துள்ளன- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விபத்துகளைக் குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு குறுந்தகடை(சிடி) மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாநகரை சிக்னல் இல்லா மாநகராக்கும் முயற்சியில் காவல் துறை ஈடுப்பட்டுள்ளது.
வட்ட பூங்கா, யூ-டர்ன் திருப்பம் அமைக்கப்பட்டதன் மூலம் பயணத்தின் போது காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதோடு, விபத்துகளும் குறைக்கப்பட்டுள்ளன.
அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, பொள்ளாச்சி சாலை, வழித்தடங்களில் ஏராளமான தொழிற்சாலைகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன.

போக்குவரத்தை சீர்ப டுத்த சந்திப்புகளில் சிக்னல்கள் நிறுவப்பட்டு செயல்படுத்த வந்தன. சிக்னல்களில் வாக னங்கள் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி, பயணத்தை எளிமையாக்க மாநகர காவல்துறை, தனியார் அமைப்புடன் இணைந்து ஆய்வு செய்தது.
இதன் தொடர்ச்சியாக முக்கிய சந்திப்புகளில் சுற்று வட்டப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், யூ-டர்ன் திருப்பங்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து சோதனை நடத்தப்பட்டது.
இதில், கோவை மாநகர போலீஸ், போக்குவரத்து நெரி சலைக் கட்டுப்படு த்துவதிலும், விபத்துகளைக் குறைப்பதிலும், வெற்றி கண்டுள்ளது.
பஸ்கள் திரும்பும் இடங்களில் உள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பழைய சிக்னல்கள் ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்கள் ஆய்வு செய்ய ப்பட்டு மாற்றி அமைக்கப்படும்.
முதற்கட்டமாக கோவை மாநகரில் ஏற்படுத்தப்படடுள்ள இந்த போக்குவரத்து மாற்றத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக, இந்த சாலைகளில் நாள்தோறும், பயணிக்கும் வாகன ஓட்டிகள் திருப்தி தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.