Police Department News

மெரினாவில் இனி வாரந்தோறும் பொது வெளியில் இசை நிகழ்ச்சி- சென்னை பெருநகர காவல்துறை ஏற்பாடு

மெரினாவில் இனி வாரந்தோறும் பொது வெளியில் இசை நிகழ்ச்சி- சென்னை பெருநகர காவல்துறை ஏற்பாடு

சென்னை மெரினாவில் வாரந்தோறும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல் துறையின் இசைக்குழுவினர் இனி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.
அதற்கான நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தோம். நேர்த்தியான இசையை வழங்கியதைக் கேட்டு ரசித்தோம். இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்துறை சார்பில் பொது வெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.