குட்கா விற்ற 10 கடைகளுக்கு உணவு விற்பனை அனுமதி ரத்து
மதுரை நகரில் தடை செய்யப் பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்று வருவதாக அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அறிவு றுத்தலின்படி உணவு பாது காப்பு அலுவலர் ஜெயராம்பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் மதுரை நகர் முழுவதும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர்.
நகர் பகுதிகளில் 9 குழுக்களாகவும், புறநகர் பகுதிகளில் 10 குழுக்களாகவும் பிரிந்து இந்த சோதனை நடந்தது. மொத்தம் 206 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 16 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடைகளில் இருந்து 6.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட் டது. மேலும் 16 கடைக ளுக்கும் ரூ.1 லட்சத்து 10 அபராதம் விதிக்கப்பட்டது. 10 கடைகளுக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. அதற்கான நோட்டீசை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் வழங்கினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மதுரை நகர் பகுதிகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இதுபோன்ற சட்ட விரோதமாக விற்பனை செய்யும் கடை உரிமம் ரத்து செய்யப்படும். அபராதமும் விதிக்கப்படும். இனி இது போன்ற ஆய்வுகள் மதுரை நகரில் அடிக்கடி மேற் கொள்ளப்படும் என தெரிவித்தனர்