அபராதம் குற்றவாளிகளை திருத்துமா?
அபராதம் என்பது சிறு குற்றங்களுக்கு மட்டும் தான் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பெரிய குற்றங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்காது அப்படி நிர்ணயிக்கப்படாத குற்றங்களுக்கு அபராதம் விதிக்கும் போது ஓர் அளவோடு மட்டுமே விதிக்க வேண்டும் அது எல்லை மீறியதாக இருக்க கூடாது என இ.த.ச. பிரிவு 63 ஆனது அறிவுறுத்திகிறது
ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் வசதி என்ன என்ற சூழ்நிலையை புரிந்து அதற்கு தக்கவாரே அபராத தொகையை விதிக்க வேண்டும்
போலி முத்திரைதாள் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் தெல்கிக்கு 28/6/2007 அன்று புனேயில் உள்ள திட்டமிட்ட குற்ற வழக்குகளுக்கான சிறப்பு நீதி மன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது
இந்த அபராதம் இந்திய நீதி மன்றங்களில் விதிக்கப்பட்ட மிக பெரிய அபராதம் ஆகும்.
குற்றவாளிகளின் பொருளாதார சூழ்நி லையை அனுசரித்து அபராதம் பெரிய அளவில் விதித்தால் மட்டுமே குற்றவாளிகள் திருந்த வாய்புள்ளது