மதுரை சிந்தாமணி சந்திப்பில் புதுப்பிக்கப்பட்ட காவல் உதவி மையம் மற்றும் தானியங்கி சிக்னல் திறப்பு
மதுரை அவனியாபுரம் சிந்தாமணி சந்திப்பில் புதுப்பிக்கப்பட்ட காவல் உதவி மையம் மற்றும் தானியங்கி சிக்னல் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருதி வாகன ஓட்டிகளுக்கு முதலுதவி பெட்டி (35) ,இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் (20) வழங்கப்பட்டது.
தொலைவில் வரும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் சமிக்கைக்கு ஏற்ப ஒளிரும் LED STRIP –க்கள் ஒட்டப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்களுக்கு போக்குவத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுகள் அடங்கிய புதிய பதாகைகள் காவல் உதவி மையத்தின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து காவல் ஆணையர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது. போக்குவரத்து துணை ஆணையர் திரு. குமார் IPS.,கூடுதல் ஆணையர் திரு.திருமலை குமார், போக்குவரத்து உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.