
மதுரையில் குடி போதையில் வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்து சிறையில் அடைப்பு
கடந்த 16ஆம் தேதி அன்று மதுரை மாநகர் பனங்கல் ரோட்டில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த ஆட்டோ சாலையை கடக்க முயன்ற 68 வயதான பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு
நிற்காமல் சென்று விட்டது தலையில் பலத்த காயப்பட்ட மேற்படி நபரை அருகில் இருந்தவர்களின் உதவியோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.
மேற்படி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ ஓட்டுனர் மீது தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ll. உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் மேற்படி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ ஓட்டுநர் விஜய் வயது 28 த/பெ. நாகேந்திரன் அப்பாஸ் தெரு யாகப்பன் நகர் மதுரை என்பது புலனாய்வில் தெரியவந்தது.மேலும் மேற்படி நபரை விசாரிக்கும் போது மேற்படி வயதான பெண்மணி மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியதும் தெரியவந்ததுமேலும் குடிபோதையில் வாகன ஓட்டக்கூடாது என்று தெரிந்தும் மீறி ஓட்டினால் வாகன விபத்தும் உயிரிழப்பும் ஏற்படும் என்று நன்கு தெரிந்தும் அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் ஆட்டோவை ஓட்டி விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்திய மேற்படி நபரை புலன் விசாரணை அதிகாரி உடனே கைது செய்து நீதிமன்ற நடுவரிடம் ஆஜர் படுத்தியதில் நீதிமன்ற நடுவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதின் பேரில் மேற்படி நபரை 15 நாட்கள் சிறையில் அடைத்தனர்
ஆகவே இனி வரும் காலங்களில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டினாலோ அல்லது வாகன விபத்தை ஏற்படுத்தினாலோ வாகன ஓட்டுனர் மீது அபராதம் விதிக்கப்படுவதோடு சட்டப்படியான வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது
