
சொத்து பத்திரம் தொலைந்து போனால் போலீஸில் புகார் செய்வதெப்படி?
பத்திரம் தொலைந்து போனால் முதலில் நாம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் அந்த புகார் பதியப்பட்டதற்கான சான்றாக உங்களுக்கு CSR வழங்கப்படும் பிறகு வழக்கறிஞர் மூலம் ஏதாவது நாளிதழில் பத்திரம் தொலைந்தது தொடர்பாக CSR எண்ணை குறிப்பிட்டு பத்திரம் தொலைந்த நாள் இடம் நேரம் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு ஒரு விளம்பரம் அளிக்க வேண்டும் அதோடு பத்திரத்தின் உரிமையாளரோ அல்லது புகார்தாரரோ ஒரு நோட்டரி வழக்கறிஞரிடம் தொலைந்த பத்திரம் குறித்த ஒரு உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கி கொள்ள வேண்டும்
பிறகு பத்திரப்பதிவு அலுவலகத்தில் உங்கள் தொலைந்த பத்திரத்தின் நகல் பத்திரம் பெற வேண்டும் மேற்சொன்ன ஆவணங்கள் அனைத்தையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பின் FIR போட்டு தொலைந்த பத்திரம் காவல் துறையினறால் துரிதமாக தேடப்படும் ஆவணம் கிடைக்க வில்லையெனில் 15 நாட்கள் கழித்து காவல் துறையிடமிருந்து NTC ( Non Treaceable Certificate) பெற்றுக் கொள்ளலாம். மேற்சொன்ன ஆவணங்கள் அனைத்தையும் NTC யுடன் இணைத்து வைத்து கொள்ள வேண்டும் இப்போது அது அசல் ஆவணமாக கருதப்படும்
காவல் துறையில் புகார் அளிக்கும் இந்த சேவை தற்போது ஆன்லைன் செய்யப்பட்டுள்ளது.
https://eservices.tnpolice.gov.in/
