Police Department News

சரக்கு வாகனத்தில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல் இருவர் கைது

சரக்கு வாகனத்தில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல் இருவர் கைது

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 28 மூட்டை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர் மதுரை பந்தயத்திடல் சாலையில் தல்லாகுளம் போலீசார் சனிக்கிழமை இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் 28 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் செல்வது தெரியவந்தது இதையடுத்து போலீசார் வாகனத்தில் வந்த அழகர் கோயில் அருகே உள்ள பொய்கை கரை பட்டியை சேர்ந்த ரவிக்குமார் வயது 52 அருண்குமார் வயது 35 ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர் விசாரணையில் ரவிக்குமார் பொய்கை கரை பட்டியில் மளிகை கடை நடத்தி வருவதாகவும் குட்கா பொருள்களை மொத்தமாக வாங்கி சரக்கு வாகனத்தின் மூலம் மதுரை நகரில் உள்ள இதர கடைகளுக்கு விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்வதும் தெரியவந்தது இதை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சரக்கு வாகனத்துடன் 28 மூட்டைகள் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்

Leave a Reply

Your email address will not be published.