பெண்களைக் காக்கும் `காவலன்’ செயலி… பயன்படுத்துவது எப்படி?
இந்த ஆப்பை டவுன்லோடு செய்வதன் மூலம் ஆபத்திலிருக்கும் நேரத்தில், அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்டவர்களுக்குக் காவல்துறையின் பாதுகாப்பு கிடைத்துவிடும்.பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழகக் காவல்துறை “காவலன் SOS’ என்ற ஆப்பை இந்த வருடம் அறிமுகம் செய்தது.இந்த ஆப்பை டவுன்லோடு செய்வதன் மூலம் ஆபத்திலிருக்கும் நேரத்தில், அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்டவர்களுக்குக் காவல்துறையின் பாதுகாப்பு கிடைத்துவிடும் என்பதால் தனியாகப் பயணிக்கும் அனைத்துப் பெண்களுமே இந்த ஆப்பை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்வது நல்லது எனக் காவல்துறையின் சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
கூகுள் ப்ளே ஸ்டோரில் காவலன் SOS' என்று தேடி தமிழகக் காவல்துறையின் முத்திரையுடன் இருக்கும் காவலன் ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இந்த ஆப்பிற்கு ஆடியோ ரெக்கார்டிங், வீடியோ ரெக்கார்டிங் அவசியம் என்பதால் அதற்கு அனுமதி கொடுத்துக் கொள்ளவும். இதில் தமிழ்/ஆங்கிலம் என இரண்டு மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு எந்த மொழி பயன்படுத்த வசதியாக இருக்குமோ அந்த மொழியைத் தேர்வு செய்துகொள்ளவும். (காவலன் SOS) அதன்பின் தமிழகக் காவல் துறையின் முத்திரையுடன் கூடிய பதிவுப் பக்கம் தோன்றும். இதில் உங்களின் மொபைல் எண், பெயர், மாற்று எண் போன்றவற்றைப் பதிவிட்டுக்கொள்ளவும். பிறகு அதில் உள்ள
Next’ என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
இப்போது பிறந்த தேதி, பாலினம், நீங்கள் வசிக்கும் இடம், நீங்கள் பணிபுரியும் இடத்தின் முகவரி, மெயில் ஐடி போன்ற தகவல்களைக் கேட்கும், இந்த ஆப். இந்த அடிப்படைத் தகவல்களைக் கொடுத்த பின் உங்கள் மொபைலுக்கு OTP (One Time Password) எண் வரும். அதைக் கொடுத்து பதிவு செய்தால் காவலன் SOS' ஆப்பில் உங்கள் கணக்கு ரெடி ஆகிவிடும். நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது உங்களைப்பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டிய மூன்று நபர்களின் மொபைல் எண்களைப் பதிவிடும் வசதியும் அந்த ஆப்பில் இருக்கிறது. அதனால் ஆபத்துக் காலத்தில் உங்களைப்பற்றிய தகவல் யாருக்குக் கிடைத்தால், அவர்களின் உதவி உங்களுக்கு உடனடியாக கிடைக்குமோ, அந்த நபர்களின் எண்ணை இதில் பதிவிடுங்கள். இதன்பின் நீங்கள் எப்போது ஆபத்தில் இருப்பதாக உணர்கிறீர்களோ அந்த நேரத்தில் இந்த ஆப்பை ஓபன் செய்து நடுவில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும்
SOS’ என்ற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால் போதும். SOS என்பது முன்பு கப்பல்களில் Save our Souls',
Save our Ships’ என்று உதவி கேட்கப் பயன்படுத்தப்பட்ட குறியீடு.இப்படி இந்த ஆப்பில் SOS பட்டனை அழுத்திவிட்டால் GPS இயங்க ஆரம்பித்துவிடும். மேலும், உங்கள் மொபைல் போனில் இருக்கும் கேமரா தானாகவே இயங்கி, வீடியோ எடுத்து, காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பிவிடும்.ஆபத்தில் இருக்கும்போது இணைய வசதி இல்லையே, எப்படி நம்மைப் பற்றிய தகவல்கள் காவல்துறைக்குக் கிடைக்கும், ஜி.பி.எஸ் எப்படிச் செயல்படும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம். உங்கள் போனில் இணைய வசதி இல்லாத நேரத்திலும், நீங்கள் SOS' பட்டனை அழுத்துவதன் மூலம் உங்களைப் பற்றிய தகவல்கள் காவல் கட்டுப்பாட்டு மையத்திற்குக் குறுஞ்செய்தியாக (SMS) சென்றுவிடும். காவல் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் சென்ற சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் பகுதிக்குக் காவல் அதிகாரிகள் வந்து உங்களை பாதுகாப்பார்கள்.
காவலன் SOS’ ஆப்பில் இருக்கும் SOS' பட்டனை அழுத்திய உடன் ஜி.பி.எஸ் இயங்க ஆரம்பித்துவிடும் என்பதால்,
சும்மா ட்ரையல் செய்து பார்ப்போம்’ என்று SOS பட்டனை அழுத்திவிடாதீர்கள். தேவையென்றால் மட்டுமே அதை அழுத்துங்கள்.தவறுதலாகவோ, தெரியாமலோ க்ளிக் செய்தாலும் கூட, தேவையில்லாமல் காவல்துறையில் நேரத்தை வீணாக்குவது போல் ஆகிவிடும் என்பதால் இந்த ஆப்பினைப் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பது அவசியம். இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்