புயல் கரையை கடக்கும் வரை..! பொது மக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு “மிக்ஜாங்” என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புயல் எதிரொலியால் பொது மக்களுக்கு சென்னை காவல்றை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும், சமூக வளைதளங்களில் புயல் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடல் அலைகள் அதிகப்படியால் இருப்பதால் பொது மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னலின்போது எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.