



சாலை பாதுகாப்பு வாரவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
மதுரையில் மத்திய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம்,மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து காவல்துறை வட்டார போக்குவரத்து நேரு யுவகேந்திரா சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு வார விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் டி.ஆர்.ஒ.,சக்திவேல் போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார் அவர்கள் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவின்படி ஜனவரி 8 ம் தேதி அன்று காலையில் மதுரை காந்தி என்.எம்.ஏர் கல்லூரி அனுப்பானாடியில் வைத்து நூறு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர் மன்ற உறுப்பினர்கள்.
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெறுகிறது. அதே போல் அன்று மாலை நரிமேடு தமிழ்நாடு பாராமெடிக் கல்லூரியிலும் 100 பேர், 9ம் தேதி காலை யாதவர் ஆண்கள் கல்லூரியிலும் 100 பேர். அன்று மாலை எல்.டி.சி., கல்லூரியிலும் 100 பேர், அதே போல் 10 ம் தேதி காலை சுப்பு லெட்சுமி லெட்சுமிபதி கல்லூரியிலும் 100 பேர், மாலை அம்பிகா கல்லூரியிலும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடைபெறுகிறது. இதற்கான பயிற்சியை மதுரை மாநகர் போக்குவரத்து துணை ஆணையர் குமார் மற்றும்
இணை போக்குவரத்து ஆணையர் சத்திய நாராயணா மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த ஜான் வெஸ்லி ஆகியோர் தலைமையில் பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகிறது.
தொடர்ந்து ஜனவரி 11-ம் தேதி என்.எம்.ஏர் கல்லூரி சார்பில் 100 பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர் மன்ற உறுப்பினர்களும் மதுரை மாநகர் பகுதியல் உள்ள 30 சிக்கனலும் போக்குவரத்து இடையூறுகளை சீர் செய்வார்கள். இது போன்று ஜனவரி 12-ம் தேதியில் பாரா மெடிக்கல்லூரி மாணவர்கள், ஜனவரி 13-ம் தேதி சுப்புலெட்சுமி லெட்சுமிபதி கல்லூரி மாணவர்கள், ஜனவரி 14-ம் யாதவர் ஆண்கள் கல்லூரி மாணவர்கள், ஜனவரி 17-ம் தேதி அம்பிகா கல்லூரி மற்றும் தன்னார்வ தொண்டர்களும், ஜனவரி 18-ம் தேதி எல்.டி.சி கல்லூரி மாணவர்களும் இணைந்து போக்குவரத்து இடையூறுகளை சீர் செய்து போக்குவரத்து காவலர்களுக்கு உதவியாக இருப்பார்கள். மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் ஒவ்வொரு நாளும் 100 இளைஞர்கள் வீதம் 500 பேர் இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தில் பங்கேற்கிறார்கள். இந்த சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வை மதுரை மாநகர காவல்துறை ஆணையர் திரு. லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி மாநகர் போக்குவரத்து துணை ஆணையர் குமார், காவல் உதவி ஆணையர் செல்வின்,மற்றும் இளைஞர் நல இணை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் செய்துவருகின்றனர். என்.எம்.ஆர் கல்லூரி முதல்வர் கோமதி உட்பட பல்வேறு கல்லூரி முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
